கடையம் அருகே பழக்கடையில் குட்கா விற்ற 2 பேர் கைது
1 min read
Two arrested for selling gutka at a fruit stall near Kadayam
17.6.2022
கடையம் அருகே பழக்கடையில் குட்கா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குட்கா விற்பனை
கடையம் அருகே உள்ள மலையான்குளம் பகுதியிலுள்ள ஒரு பழக்கடையில் குட்கா விற்பதாக ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடையம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் பாலமுருகன் என்பவரது பழக்கடையை சோதனை செய்தனர். அப்போது தடைசெய்யப்பட்ட குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. அவரிடமிருந்து 5½ கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரை கைது செய்தனர்.
மேலும் இதேபோல் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது கடையிலும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடையில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. அவரிடமிருந்து சுமார் 1½ கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.