கூகுள் டிரைவில் தகவல்களை ஊழியர்கள் சேமிக்கக் கூடாது- மத்திய அரசு உத்தரவு
1 min read
Employees should not store information on Google Drive – Federal Order
18.6.2022
கூகுள் டிரைவில் தகவல்களை சேமிக்க ஊழியர்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரவு
கூகுள் ட்ரைவ், டிராப் பாக்ஸ், விபிஎன் ஆகிய இணைய சேவை நிறுவனங்களில் தகவல்களை சேமிக்கக் கூடாது என்று மத்திய அரசு தனது ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது. ஆவணங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விபிஎன் சேவை வழங்கும் நிறுவனங்களும் தரவுகள் சேமித்து வைக்கும் நிறுவனங்களும் பயனர்களின் தரவுகளை 5 ஆண்டுகள் வரை சேமித்து வைக்க வேண்டும் என்ற உத்தரவு வெளியான சில வாரங்களில் ஊழியர்களுக்கு அரசு மேற்கண்ட அறிவுறுத்தலை விடுத்துள்ளது. இந்திய கம்ப்யூட்டர் ஏஜென்சிஸ் ரெஸ்பான்ஸ் குழு மற்றும் தேசிய புள்ளியல் மையமும் இணைந்து செய்த பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேநேரம், மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய சுய விவரங்களை அவற்றில் சேமித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.