இந்த ஆண்டு இதுவரை ஜம்மு-காஷ்மீரில் 118 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
1 min read
So far this year, 118 terrorists have been killed in Jammu and Kashmir
23.6.2022
இந்த ஆண்டு இதுவரை ஜம்மு காஷ்மீரில் 118 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகள்
ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 118 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. இதில், 32 பயங்கரவாதிகள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர். கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 2 வெளிநாட்டு பயங்கரவாதிகள் உட்பட மொத்தம் 55 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். நடப்பாண்டில் கொல்லப்பட்ட 118 பேரில் 77 பயங்கரவாதிகள் பாக். ஆதரவு பெற்ற லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், 26 பயங்கரவாதிகள். ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் காஷ்மீர் மண்டல காவல்துறை ட்வீட் செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவங்கள் அவ்வபோது பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசாரால் முறியடிக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளின் தாக்குதல்களை முறியடிக்க பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.