June 2, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 13,313 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 13,313 newcomers in India

23.6.2022
இந்தியாவில் ஒருநாளில் புதிதாக 13,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கடந்த 20-ந் தேதி 12 ஆயிரத்து 781 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை (21-ந் தேதி) இது அதிரடியாக 9 ஆயிரத்து 923 ஆக குறைந்தது. ஆனால் நேற்று (22-ந் தேதி) கொரோனா பாதிப்பு மீண்டும் 12 ஆயிரத்தைக் கடந்தது. இதன்படி நேற்று 12 ஆயிரத்து 249 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருந்தது.

இந்நிலையில் இன்று புதிதாக 13,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13 ஆயிரத்து 313 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,33,44,958 ஆக அதிகரித்துள்ளது.

38 பேர் சாவு

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,24,941 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10,972 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,27,36,027 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 83,990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,96,62,11,973 பேருக்கு (இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14,91,941 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 6,56,410 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 85,94,93,387 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.