தமிழகத்தில் இன்று 2,671 பேருக்கு கொரோனா
1 min read
Today, 2,671 people are infected with Corona in Tamil Nadu
9.7.2022
தமிழகத்தில் இன்று 2,671 பேருக்கு கொரோனா உறுதி செய்ய்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் நேற்று 2,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று பாதிப்பு குறைந்துள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,722ல் இருந்து 2,671 ஆக குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு 939ல் இருந்து 844- ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 18,842 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,516 ஆக உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 465 பேருக்கும், திருவள்ளூர் -161, கோவை -118, நெல்லை -112, தூத்துக்குடி -64, காஞ்சிபுரம் -80, சேலம்-61, கன்னியாகுமரி -60, திருச்சி- 58, ராணிப்பேட்டை -39, விழுப்புரம் -38 – பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.