இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பி.எஸ். தரப்பில் பதில் மனு
1 min read
OPS to Election Commission of India Reply by the party
11.7.2022
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வை ஏற்கக் கூடாது, ஒப்புதல் அளிக்கக் கூடாது என ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் அளித்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால பொதுச்செயலாளர்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட தீர்மானம் மற்றும் பொதுகுழுவில் கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்தது.
பொறுப்பாளர்கள் மாற்றம், விதிகளை திருத்தம் செய்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் அதிமுக மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்து இருந்தது.
பதி்ல் மனு
இதற்கு பதிலடியாக அதிமுக பொதுக்குழுவில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருப்பதாக குற்றஞ்சாட்டி ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வை ஏற்கக் கூடாது, ஒப்புதல் அளிக்கக் கூடாது என ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் அளித்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.