இந்தியாவில் புதிதாக 16,906 பேருக்கு கொரோனா
1 min read
16,906 new corona cases in India
12.7.2022
இந்தியாவில் புதிதாக 16,906 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தின பாதிப்பான 16 ஆயிரத்து 678 மற்றும் நேற்றைய பாதிப்பான 13 ஆயிரத்து 615ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 69 ஆயிரத்து 850 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 15 ஆயிரத்து 447 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 11 ஆயிரத்து 874 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 457 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 519 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 199 கோடியே 12 லட்சத்து 79 ஆயிரத்து 10 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.