18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி; மத்திய அரசு தகவல்
1 min read
Free booster vaccination for those over 18; Central Govt Information
13/7/2022
18 வயது மேற்பட்டோருக்கு அடுத்த 75 நாள்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
முன்னதாக 60 வயது மேற்பட்டோருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள் ஜூலை 15 முதல் 75 நாள்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்திக்கொள்ளலாம்.
நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், 75 நாள்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.