இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 16,935 பேராக குறைந்தது
1 min read
Daily corona cases in India reduced to 16,935
18.7.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 16,935 பேராக குறைந்தது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக 20 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் இன்று புதிதாக 16,935 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 935 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,37,67,534 ஆக அதிகரித்துள்ளது.
51 பேர் சாவு
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,760 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 16,069 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,97,510 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,44,264 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 2,00,04,61,095 பேருக்கு (இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,46,671 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 2,61,470 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 86,96,87,102 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.