June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பயிற்சியின் போது வயலில் விபத்துக்குள்ளான சிறியரக விமானம்

1 min read

A small plane crashed in a field during training

25.7.2022
பயிற்சியின்போது சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் பெண் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பயிற்சி விமானம்

மராட்டிய மாநிலம் பாராமதி மாவட்டத்தில் கார்வெர் ஏவியேஷன் என்ற விமான பயிற்சி நிறுவனம் உள்ளது. இங்கு சிறிய ரக விமானங்கள் சுற்றுலா, பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பயிற்சி நிறுவனத்தில் இருந்து இன்று காலை சிறிய ரக விமானத்தில் பெண் விமானி பூவிகா ரதொவ்ட் பயிற்சி மேற்கொண்டார். அந்த சிறியரக விமானத்தில் அவர் மட்டுமே பயணித்தார். பூனே மாவட்டத்திற்கு மேலே வானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட விமானி பூவிகா விமானத்தை கட்பண்ட்வாடி என்ற கிராமத்தில் உள்ள வயல்வெளியில் தரையிறக்கினார். அப்போது, வயல்வெளியில் விமானம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது விமானத்தின் எஞ்சின் பகுதி சேதமடைந்தது. ஆனாலும், இந்த விபத்தில் பூவிகா சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விமானம் வயல்வெளியில் விபத்துக்குள்ளானதை அறிந்த அக்கிராமத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த விமானி பூவிகாவை மீட்டனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.