தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு கொரோனா
1 min read1,624 people have corona in Tamil Nadu today
29.7.2022
தமிழகத்தில் கோரோனா தொற்று சற்று குறைந்து இன்று நாளில் 1,624 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-
மாநிலத்தில் இன்று (29-ந் தேதி) 35,984 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தமிழகத்தில் 1,624 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,41,231 ஆக அதிகரித்துள்ளது. இன்று 2,004 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,89,689 ஆக உயர்ந்து உள்ளது.
இன்று கோவிட்டுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. கோவிட்டுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,032 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் குறைவாக காணப்பட்டது. நேற்று (28-ந்தேதி ) 368 ஆக இருந்த நிலையில் இன்று சென்னையில் 353 ஆக குறைந்து உள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 13,510 ஆக உள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.