April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

பூமியின் சுழற்சி வேகம் அதிகரிப்பு-விஞ்ஞானிகள் தகவல்

1 min read

Earth’s Rotation Speed Increases – Scientists Report

31.7.2022
பூமி 24 மணி நேரத்திற்குள் தனது ஒருநாள் சுழற்சியை முடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமி 24 மணி நேரத்திற்குள் தனது ஒருநாள் சுழற்சியை முடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக பூமி தன் வட்டப்பாதையில் சுழன்று கொண்டு சூரியனையும் 365 நாட்களில் சுற்றி வருகிறது என்பதே அறிவியல் உண்மை. பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாட்களை எடுத்துக்கொள்கின்றதுடன், தன்னைத்தானே சுற்றிக்கொள்வதற்கு 24 மணி நேரம் செல்கின்றது.
இந்த நிலையில், பூமி தற்போது 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது சுழலும் வேகத்தில் ஒரு வினாடி மாறுபாடு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியின் மையப்பகுதி, பெருங்கடல்கள், வளிமண்டலத்தின் இயக்கம் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசை ஆகிய பல்வேறு காரணங்களால் பூமியின் சுழலும் வேகத்தில் மாற்றம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஜூலை 29 அன்று, பூமி அதன் குறுகிய நாள் சாதனையை முறியடித்தது. Also Read – மலிவான மொபைல் டேட்டா வழங்கும் 5 நாடுகள் கடந்த 2020 ஆம் ஆண்டு பூமி மிகவும் குறுகிய கால மாதத்தை பதிவு செய்தது. 1960 க்கு பின் மிகவும் குறுகிய காலத்தில் முடிந்த மாதமாக அது கருதப்பட்டது. இந்த நிலையில் நேற்று, பூமி மிகவும் குறுகிய நாளை பதிவு செய்தது. அதாவது 24 மணி நேரத்திற்குள் பூமியின் ஒரு நாள் சுழற்சியானது முடிந்துவிட்டது. இதன் மூலம் பூமி வேகமாக சுழல்வது மீண்டும் தெரியவந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று பூமி மிகவும் வேகமாக சுழன்று, 24 மணி நேரத்திற்குள் ஒரு நாளை நிறைவு செய்தது. அதாவது 1.47 மில்லி செகண்ட்ஸ் முன்னதாகவே பூமி தனது சுழற்சியை நிறைவு செய்தது. இந்த நிலையில் நேற்று பூமி 1.59 மில்லி செகண்ட்ஸ் முன்னதாகவே தனது ஒரு நாள் சுழற்சியை நிறைவு செய்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு பூமி இதைவிட வேகமாக சுழன்று இந்த சாதனையை முறியடிக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். எதனால் இத்தகைய வேறுபாடு நிகழ்ந்துள்ளது என்பது சரியாக தெரியவில்லை. அது குறித்து ஆராய்ச்சி நடந்து வருகின்றன. இதற்கு காரணமாக பருவ நிலை மாற்றம், கடலில் ஏற்படும் மாற்றங்கள், பூமியின் உள்பாகத்தில் ஏற்படும் மாற்றங்கள் சொல்லப்படுகின்றன. இவ்வாறு வேகமாக சுழற்சி நடைபெற்றால் நெகட்டிவ் செகண்ட்ஸ் ஏற்படும். அதாவது நெகட்டிவ் எண்களில் வினாடிகள் தேங்கும். இதனால் ஸ்மார்ட் போன்கள், கம்ப்யூட்டர்கள், தொலைதொடர்பு அமைப்புகளில் பாதிப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறது. இதனை சரிகட்ட, ஒருங்கிணைந்த யூனிவர்சல் டைம்(யுடிசி) ஏற்கனவே 27 முறை செகண்ட் முறை மாற்றி அமைத்துள்ளது. இப்போது மீண்டும் அதை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்போதுதான் தொலைத்தொடர்பு சாதனங்களில் மற்றும் உலக அளவில் நேரத்தை சரியாக கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. பூமியின் சுழற்சி வேகம் அதிகரிப்பதனால், விஞ்ஞானிகள் அணு கடிகாரத்தை 1 வினாடி குறைக்கிறார்கள். இங்கிலாந்தின் தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் விஞ்ஞானி பீட்டர் வைபர்லி கூறுகையில், சுழற்சி வேகம் மேலும் அதிகரித்தால், நாம் ஒரு வினாடியைக் குறைக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.