May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

‘போலி ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கம் குறைந்தது’ மத்திய மந்திரி தகவல்

1 min read

‘Circulation of fake Rs.2000 notes has decreased’ Central Minister informed

2.8.2022
2018-19ம் நிதியாண்டு முதல் போலி ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறைந்துள்ளதாக லோக்சபாவில் மத்திய மந்திரி கூறினார்

கள்ள ரூபாய் நோட்டு

போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா எம்.பி., ஆர்.டி பட் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி பேசியதாவது:-

2 ஆயிரம் ரூபாய் நோட்டு

2021-22ம் நிதியாண்டில், வங்கிகளில் உள்ள ஒட்டுமொத்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில், 13,604 நோட்டுகள் போலியானவை என கண்டறியப்பட்டன. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின்படி, 2018ம் ஆண்டு, 54,776 போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2019ல் 90,556 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ச்சியான நடவடிக்கையில், அதிரடியாக 2,44,834 போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

90 சதவீதத்துக்கும் அதிகமான போலி நோட்டுகள் தரம் குறைந்தவை என்று கண்டறியப்பட்டது, இருப்பினும் அவை இந்திய ரூபாய் நோட்டுகளில் அனைத்து முக்கிய பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளன.
தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ போலி ரூபாய் நோட்டுகளை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்துவது மற்றும் நிதி திரட்டுவதை விசாரிக்க டி.எப்.எப்.சி என்ற தனிப்பிரிவை உருவாக்கி உள்ளது.
வங்கதேசத்தில் இருந்து போலி நோட்டுகளை கடத்தி வந்து இந்தியாவில் புழக்கத்தில் விடுவதை தடுக்கவும் , தகவல் பரிமாற்றத்திற்காகவும் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.