May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

டெல்லி, கேரளாயவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை

1 min read

One more case of monkey measles in Delhi, Kerala

2.8.2022
டெல்லி மற்றும் கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டது.

குரங்கு அம்மை

இந்தியாவில் கடந்த 14 ஆம் தேதி குரங்கு அம்மை பாதிப்பு முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் வயநாடு வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 35 வயதான குரங்கு அம்மை பாதித்த நபர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் தொற்றில் இருந்து குணம் அடைந்தார். இவரை தவிர கேரளாவில் மேலும் 4 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் இதுவரை குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் தலைநகர் டெல்லியில் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று டெல்லியில் வசிக்கும் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.