May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

அதானியுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது ஏன்?- நிர்மலா சீதாராமன் கேள்வி

1 min read

Why has the Tamil Nadu government signed an agreement with Adani?- Nirmala Sitharaman asked

2.8.2022
“திமுக குற்றம்சாட்டும் அதானியுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது ஏன்?” என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கேள்வி விடுத்தார்.

கனிமொழி

பாராளுமன்றத்தில் விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்தில் தி.மு.க., எம்.பி., கனிமொழி பேசும் போது கூறியதாவது:-
இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு தொழிலதிபர் உலகத்திலேயே நான்காவது பெரும் பணக்காரராக உள்ளார். பில்கேட்சை தாண்டி ஒரு இடத்தில் அவர் வைக்கப்பட்டு உள்ளார். அதனால், சில பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
காரணம், அந்த கார்ப்பரேட் தொழிற்துறைகளுக்கு வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. நாங்கள் தொழில் வளர்ச்சி வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால், அடித்தட்டிலேயே, வாழும் மக்களுக்கு எந்த உதவியும் செய்யத் தயங்கக்கூடிய இந்த ஆட்சி இப்படி இருக்க் கூடிய கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டு, அவர்களை வளர்த்தெடுத்து வார்த்தெடுத்து கொண்டு இருக்கக் கூடிய ஆட்சி இங்கே நடைபெற்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

இதன் பிறகு நிர்மலா சீதாராமன் பேசும்போது கூறியதாவது:-

தமிழ்நாட்டில்…

பெரிய பெரிய அம்பானி, அதானிக்கு மட்டும் தான் நீங்க் எல்லாம் செய்வதாக குற்றம்சாட்டுகிறீர்கள். உங்க, தமிழ்நாட்டில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. இதற்கு 35 ஆயிரம் கோடி மதிப்பாகும். அதானியுடன் சேர்ந்து டேடா சென்டர் அமைக்கிறது. மத்திய அரசு பெரு நிறுவனங்களுக்கு உதவுவதாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள் தங்கள் ஆளும்மாநிலங்களில் அந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்குவது ஏன்? ராஜஸ்தான் அரசு, மின்சாரம் தயாரிப்புக்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்குகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

வெளிநடப்பு

மந்திரி பேசும் போது திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் முழக்கம் எழுப்பியபடி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

திமுக வாக்குறுதிகள் குறித்து நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு பேசும் போது, திமுக , காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர். அப்போது கோபமடைந்த நிர்மலா சீதாராமன் கூறும்போது, “நீங்கள் பேசும் போது, நான் அமைதியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். பிறகு நான் பேசும்போது, நீங்கள் ஏன் கேட்க மாட்டேன் என்கிறீர்கள். நான் பேசுவதை நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும்” என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.