இலங்கை துறைமுகம் செல்லும் சீனாவின் ஆய்வுக் கப்பல் பற்றி இந்தியா கருத்து
1 min read
India comments on China’s survey ship going to Sri Lankan port
4.8.2022
இலங்கை துறைமுகம் செல்லும் சீனாவின் ஆய்வுக் கப்பல் பற்றி இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.
சீனா ஆய்வு கப்பல்
சீனாவின் ஆய்வு மற்று ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு புறப்பட்டுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இந்தக் கப்பல் வரும் 11 ஆம் தேதி நிறுத்தப்பட உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை பாதுகாப்புத்துறை மந்திரி நலின் ஹெராத், இந்தியாவின் கவலைகளை புரிந்து கொள்வதாகவும், இந்த கப்பல் ராணுவத்தால் நிறுவப்பட்டுள்ள அமைப்புகளை கண்காணிக்கும் திறன் கொண்டது என்றாலும், இது வழக்கமான நடைமுறையே என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா, சீனா, ரஷியா, ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளின் கடற்படை கப்பல்கள் அவ்வப்போது இலங்கைக்கு வருவது வாடிக்கையே என்றும் அணு ஆயுத கப்பல்களுக்கு மட்டுமே நாங்கள் அனுமதி அளிக்க மறுப்பு தெரிவிப்போம் எனவும் தெரிவித்தார்.
சீனாவின் ‘யுவான் வாங்’ என்ற கப்பலானது வரும் 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை இலங்கையின் துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது. இந்திய பெருங்கடலில் கண்காணிப்பு மற்றும் நேவிகேஷன் பணிக்காக இந்த கப்பலை அனுப்புவதாக சீனா தெரிவித்ததாகவும் இலங்கை தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் மற்றும் அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைளையும் எடுக்கப்படும் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கண்காணிப்பதாகவும் இந்தியா ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.