சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா
1 min read
Corona again for Sonia Gandhi
13.8.2022
சோனியா காந்திக்கு கடந்த 3 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சோனியாவுக்கு கொரோனா
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் சகோதரி மற்றும் கட்சி பொது செயலாளரான பிரியங்கா காந்திக்கு கடந்த 10ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அவருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு நெறிமுறைகளின்படி அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் சோனியா காந்திக்கு, கடந்த 3 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.