July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து; நடிகை கங்கனா ரனாவத் கண்டனம்

1 min read

Salman Rushdie stabbed; Actress Kangana Ranaut condemned

13/8/2022
சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்திற்கு நடிகை கங்கனா ரனாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சல்மானம் ருஷ்டி

அமெரிக்காவில் பிரபல சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், சல்மான் ருஷ்டி. பிரபலமான எழுத்தாளராகிய, இவர் எழுதிய,” சாத்தானின் வேதங்கள்’ என்ற நூல், சர்வதேச அளவில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், இஸ்லாமுக்கு எதிரான விஷயங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி, அவருக்கு எதிராக, கடும் போராட்டங்கள் நடந்தன.
இதனையடுத்து பயங்கரவாதிகளின் மிரட்டல் காரணமாக வெளிநாடுகளில் சல்மான் ருஷ்டி பதுங்கி வாழ்ந்து வருகிறார்.

கத்திக்குத்து

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்ற சல்மான் ருஷ்டி வந்திருந்தார். அப்போது மேடையில் நின்றிருந்த அவரை நோக்கி வந்த மர்மநபர் திடீரென கூர்மையான கத்தியால் சல்மான் ருஷ்டி கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமைடைந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். தாக்கிய நபரை அங்கிருந்த போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சல்மான் ருஷ்டியை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் செயற்கை சுவாசக்கருவியுடன் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார். பல மணி நேர சிசிச்சைக்கு பின் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கங்கனாரனாவத்

இந்நிலையில் சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்திற்கு நடிகை கங்கனா ரனாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “இன்னொரு நாள் ஜிஹாதிகளின் மற்றொரு பயங்கரமான செயல். சாத்தானின் வேதங்கள் அதன் காலத்தின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாகும்… நான் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன்” என்று அதில் கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். தாக்குதலைத் தொடர்ந்து சல்மான் ருஷ்டி வென்டிலேட்டரில் இருப்பதாகக் கூறிய செய்திக் கட்டுரையின் ஸ்கிரீன் ஷாட்டையும் ரனாவத் தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.