நியமனம் செய்த சில மணி நேரத்தில் குலாம் நபி ஆசாத் பதவியை ராஜினாமா செய்தார்
1 min read
Within hours of his appointment, Ghulam Nabi Azad resigned from the post
17.8.2022
குலாம் நபி ஆசாத் ஜம்மு-காஷ்மீரின் பிரச்சாரக் குழுவின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார். அவர் நியமனம் செய்த சில மணி நேரத்தில் அவர் ராஜானாமா செய்தார்.
குலாம் நபி ஆசாத்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். அகில இந்திய அரசியல் விவகாரக் குழு உறுப்பினர், காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி, முன்னாள் மத்திய மந்திரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இந்த நிலையில் நேற்று குலாம் நபி ஆசாத் ஜம்மு-காஷ்மீரின் பிரச்சாரக் குழுவின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே ஆசாத் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டார்.
இது அக்கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது தலைவர் பதவி மட்டுமல்ல, மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.தலைமை மாற்றம் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்கள் குழுவிலும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.