May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் சுகாதாரமும், ஆன்மிகமும் நெருங்கிய தொடர்புடையது- மோடி பேச்சு

1 min read

Health and spirituality are closely related in India – Modi speech

24.8.2022
இந்தியாவில் சுகாதாரமும், ஆன்மிகமும் நெருங்கிய தொடர்புடையது என்று பிரதமர் மோடி பேசினார்.

அமிர்தா மருத்துவமனை

அரியானாவின் பரிதாபாத் நகரில் தனியார் மருத்துவமனையாக அமிர்தா மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஆன்மிக குரு மாதா அமிர்தானந்த மயி-ன் மடம் சார்பில், ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரில் ஆசியாவின் மிகப் பெரிய தனியார் மருத்துவமனையாக அமிர்தா மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அரியானா கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா, முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

சுகாதாரம், ஆன்மிகம்

இந்தியா என்பது சுகாதாரம் மற்றும் ஆன்மிகம் என இரண்டையும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள நாடு. கொரோனா தடுப்பூசி இயக்கம் வெற்றிகரமாக நடந்ததற்கு ஆன்மீக- தனியார் கூட்டாண்மை ஒரு எடுத்துக்காட்டு. இது விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை செயல்படுத்தவும் உதவியது. தடுப்பூசி திட்டத்தின்போது, ​​சிலர் தவறான பிம்பத்தை பரப்பினர். ஆனால் நமது ஆன்மிகத் தலைவர்கள் அதை எதிர்த்து கூறியபோது, ​​மக்கள் முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
சுகாதாரத் துறையில் தொழில்நுட்பம் மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவற்றின் கலவையானது நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு 130 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்துள்ள வளாகத்தில் கட்டப்பட்ட அதிநவீன அமிர்தா மருத்துவமனை, பிரத்யேக ஏழு மாடி ஆராய்ச்சி பிரிவைக் கொண்டுள்ளது மற்றும் மாதா அமிர்தானந்தமயி மடத்தின் கீழ் ஆறு ஆண்டுகளாக கட்டப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.