மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் சோனியா: ராகுலும், பிரியங்காவும் உடன் பயணம்
1 min read
Sonia goes abroad for medical treatment: Traveling with Rahul and Priyanka
24.8.2022
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார். அவருடன் ராகுலும், பிரியங்காவும் செல்கிறார்கள்.
இது தொடர்பாக ராஜ்யசபா உறுப்பினரும், கட்சி பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில் அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக வெளிநாடு செல்கிறார். டெல்லி திரும்பும் முன் அவர் தனது தாயாரையும் சந்தித்து வருவார். சோனியாவுடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேராவும் செல்கின்றனர்.