May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

மொழி பெயர்ப்பில் திருக்குறள் இருந்து பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது-
கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

1 min read

Bhakti perspective removed from Tirukkural in translation-Governor RN Ravi speech

25.8.2022
“மொழி பெயர்ப்பில் திருக்குறள் இருந்து பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது” என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

திருவள்ளுவர் சிலை

டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலை பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். ஐந்தரை அடி உயரம் மற்றும் ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட இந்த திருவள்ளுவர் சிலை வி.ஜி.பி.உலக தமிழ் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, திருக்குறள் என்பது பக்தி, வாழ்வியல், பிரபஞ்சம் என அனைத்தையும் உள்ளடக்கியது என்றும், ஜி.யோ.போப்பின் மொழிபெயர்ப்பு தான் சிறந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு எனவும் தெரிவித்தார். ஆனால், ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் இருந்து பக்தி என்ற கண்ணோட்டம் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
அத்துடன், தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் மிக மிக பழமையானது என்றும், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் யோக கலையின் முக்கியத்துவம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்.
இதையடுத்து, தமிழ் அறிஞர்கள் காலனி மொழிபெயர்ப்பாளர்களின் உள்நோக்கம் கொண்ட மொழிபெயர்ப்பை விடுத்து உண்மையான பொருட்களை வெளிக்கொணர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.