May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகியது துரதிர்ஷ்டவசமானது: காங்கிரஸ் அறிக்கை

1 min read

It is unfortunate that Ghulam Nabi Azad left the party: Congress

26.8.2022
குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகியது துரதிர்ஷ்டவசமானது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் இன்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்த குலாம் நபி ஆசாத் இது தொடர்பாக சோனியா காந்திக்கு 5 பக்கங்கள் கொண்ட கடிதத்தையும் எழுதினார். அதில், அதில், காங்கிரஸ் கட்சியில் இருந்த கலந்தாலோசனை முறையை ராகுல் காந்தி முற்றிலுமாக சிதைத்துவிட்டார். 2014 ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தியின் குழந்தைத் தனமான செயல்பாடுகளே காரணம். சோனியா காந்தி பெயரளவில் மட்டுமே தலைவராக இருக்கிறார் என்றும் குலாம் நபி ஆசாத் விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகியது துரதிருஷ்டவசமானது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” குலாம் நபி ஆசாத் கட்சியின் மூத்த தலைவர். பணவீக்கம் மற்றும் போலரசேஷனுக்கு எதிராக கட்சி போராடிக்கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் அவர் பதவி வில முடிவு செய்து இருப்பது வருத்தம் அளிக்ககூடியது. ஒட்டு மொத்த அமைப்பும் பாஜகவுக்கு எதிராக போராடும் சமயத்தில் அவர் விலகியிருப்பது துரதிர்ஷ்டவசமானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.