May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 9,436 பேராக குறைந்தது

1 min read

Daily corona cases in India reduced to 9,436

28.8.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. புதிதாக 9 ஆயிரத்து 436 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இனறு காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-

இந்தியாவில் இனறு காலை கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 436 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பான 9 ஆயிரத்து 520-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 8 ஆயிரத்து 132 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 93 ஆயிரத்து 787 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 86 ஆயிரத்து 591 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு இனறு காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 754 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 211 கோடியே 66 லட்சத்து 35 ஆயிரத்து 408 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.