புதிய கட்சிக்கு மக்களே பெயரையும் கொடியையும் தீர்மானிப்பார்கள்- குலாம் நபி ஆசாத் பேச்சு
1 min read
People will decide the name and flag for the new party – Ghulam Nabi Azad speech
4.9.2022
காங்கிரஸ் கட்சியை களத்தில் காண முடியவில்லை என்று அக்கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறினார்.
குலாம்நபி ஆசாத்
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பிறகு இன்று காஷ்மீரில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட பேரணி நடத்திய குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். குலாம் நபி ஆசாத் பேசும்போது கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியை களத்தில் எங்கும் காண முடியவில்லை. இரத்தம் சிந்தி காங்கிரஸ் கட்சியை நாங்கள் வலுப்படுத்தினோம். கம்ப்யூட்டர் மூலமோ ட்விட்டர் மூலமோ அக்கட்சி வலுவடையவில்லை. எங்கள் மீது அவதூறு பரப்ப முயற்சிக்கின்றனர். ஆனல், டுவிட்டரை தாண்டி அவர்கள் வரவில்லை. காங்கிரஸ் கட்சியை களத்தில் காண முடியாததற்கு இதுவே காரணம்.
ஜம்மு காஷ்மீர் மக்களே எனது கட்சியின் பெயரையும் கொடியையும் தீர்மானிப்பார்கள். ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் எனது அரசு கவனம் செலுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார். .