இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4,417 பேராக குறைந்தது
1 min read
Daily corona cases in India reduced to 4,417
5.9.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4,417 பேராக குறைந்தது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு பெரும்பாலும் சரிவுடனும், அவ்வப்போது ஏற்ற இறக்கமாகவும் காணப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 ஆயிரத்து 809 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. திங்கட்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தினசரி பாதிப்பு 6 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இதன்படி திங்கட்கிாமை 5 ஆயிரத்து 910 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
23 பேர் பலி
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4 ஆயிரத்து 417 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,44,66,862 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,28,030 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 6,032 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,38,86,496 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 52,336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 2,13,72,68,615 பேருக்கு (இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,93,670 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது
இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய கடந்த திங்கட்கிழமை ஒரே நாளில் 3,67,490 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 88,77,46,764 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.