May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தின முறுக்கை தின்ற எலிகள்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Mice that ate Kannayira’s twist/ comedy story/ Tabasukumar

7.9.2022
கண்ணாயிரம் குற்றாலம் செல்லும்போது மணப்பாறையில் பஸ்நின்றதால் நெய்முறுக்கு பாக்கேட் நான்குவாங்கிகொண்டு கம்பிவளைந்த குடையை மடக்கிவைத்தபடி பஸ்சில் ஏறினார். குடைகம்பி வளைந்தது மனைவிக்குதெரியாமல் இருக்க தனது இருக்கை அருகே குடையை மடக்கிவைத்தார். பயில்வான்வந்தவுடன் போர் அடிக்கிறது டீவியில் படம்போடச்சொல்லுங்கள் என்று சொன்னார்.
உடனே உதவி டிரைவர் எழுந்து டீவியில் படம்போடமுயன்றபோது உள்ளிருந்து நான்கு எலிகள் துள்ளிகுதித்து பஸ்சுக்குள் ஓடியது.கண்ணாயிரம் தனது இருக்கையின் மேல் காலை தூக்கிவைத்துக்கொண்டு உஷாராக இருந்தபோது அவரது இருக்கையின் கீழ் எலிகள் கீச் கீச் என்று கத்திக்கொண்டே இருந்தது.கண்ணாயிரம் குடையை தூக்கி ஸ்சூ..ஸ்சூ..என்று விரட்டினார். சிறிது நேரத்தில் எலிகளின் சத்தம்நின்றதால் அவை ஓடிவிட்டன என்று கண்ணாயிரம் நினைத்தார்.கண்ணாயிரம் மனைவி பூங்கொடியும் எலிக்கு பயந்து கால்களை இருக்கையின் மேல் தூக்கிவைத்துகொண்டார்.
கண்ணாயிரத்தை பார்த்து…ஏங்க உங்களால படம்பாக்காம இருக்கமுடியாதா…உங்களுக்காக டீவி பெட்டியை திறந்ததால்தானே…எலி பஸ்சுக்குள்ளே குதிச்சி ஓடிவந்தது…காலை கடிச்சா என்ன ஆகும் என்று திட்ட கண்ணாயிரமோ…பயப்படாதே பூங்கொடி…எலி சத்தம் இப்போ கேட்கல…அது எங்கோ ஓடிட்டு..என்றார். பூங்கொடியும்…ஆமாங்க…இப்போ எலிசத்தம் கேட்கலங்க..என்றார்.கண்ணாயிரமும்..ம்..நான்தான்சொன்னேனே…நீதான் கேட்கமாட்டேன்னுட்டா..என்று சொல்ல பூங்கொடியும் சிரித்தார். அவர் தன் இருக்கைக்கு கீழே பையில் நெய்முறுக்கு பாக்கெட் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு கால்களை இருக்கையின்மேலேயே வைத்துக்கொண்டார்.
இந்த நேரத்தில் டீவியை சரிசெய்து..படம் ஓடியது…படம் சுந்தரா டிராவலஸ்..அந்த படம் பல்வேறு மின்னல்வெட்டுகளுடன் பயம்காட்டிவிட்டு குலுங்கி குலுங்கி ஓடியதால் கண்ணாயிரமும் பூங்கொடியும் ரசித்து பார்க்கத்தொடங்கினர்.
பஸ் வேகமாக செல்ல…செல்ல படமும் தாறுமாறாக ஓடியது.கண்ணாயிரத்துக்கு பஸ்சில்விளக்கு எரிவது உறுத்தலாக இருந்தது.லைட்டை அணைங்க..லைட்டை அணைங்க..என்று கத்த உடனே லைட்டு அணைக்கப்பட்டது.
படத்தில் எலி ஒன்றுவர…அதை கொல்ல கையில் இரும்பு கம்பியுடன் வடிவேல் துரத்துவது போன்ற காட்சி விறுவிறுப்பாக ஓடியது. என்ன பஸ்சுக்குள்ளும் எலி…படத்திலும் எலியா…தமாசு…நல்ல தமாசு என்று சிரித்து கொண்டே படம் பார்த்தார்.
பஸ் திண்டுக்கல்லை நோக்கி வேகமாக விரைந்தது.எல்லோரும் படத்தில் மூழ்கியிருந்தபோது…ஒரு இளம்பெண் எழுந்து லைட்டை போடுங்க..லைட்டை போடுங்க…என்று கத்தினார்.உதவி டிரைவர் வேகமாக லைட்டை போட..பயில்வான் எழுந்து..என்னம்மா பிரச்சினை என்று கேட்டார்.
அதற்கு அந்த பெண் ..கண்களை கசக்கியவாறு இருட்டிலே யாரோ என்காலை சுரண்டுறாங்க என்று சொல்ல.. பயில்வான் அந்த பெண்ணின் பின்னால் இருந்த வாலிபர்களை முறைத்துபார்த்தார். அவர்கள்…ஆ…நாங்க இல்லை…நாங்க இல்லை என்றார்கள்.
அப்போது கீச் கீச் என்றபடி ஒரு எலி குதித்து ஓட அதைபார்த்த பயில்வான்..ஏம்மா..எலிதான் சுரண்டியிருக்கும்..காலல எடுத்து மேலவச்சுக்கம்மா…திண்டுக்கல் போனவுடன் பஸ்சை நிறுத்தி பஸ்சுக்குள்ள பதுங்கி இருக்கும் எலிகளை விரட்டுவோம் என்று சொன்னார்.

கண்ணாயிரம்…அப்பாட..காலை தூக்கிமேல வச்சிருந்தேன்..இல்லன்னா..என் காலையும் சுரண்டியிருக்கும்…தப்பிச்சேன் என்றவாறு..படத்தை பார்த்தார்.விளக்குஎரிந்ததால் படத்தை ரசித்து பார்க்கமுடியவில்லை என்று நினைத்தார்.லைட்டை அணைக்க சொல்வோமா..வேண்டாமா என்று யோசித்தவர்…பூங்கொடியை பார்க்க..அவர்நன்றாக தூங்கிகொண்டிருந்தார்கண்ணாயிரம் மெல்ல பயில்வானிடம்..லைட்டை அணைக்க சொல்லுங்க…படம் பார்க்கணும் என்று சொல்ல அடுத்த நிமிடம் மீண்டும் விளக்கு அணைக்கப்பட்டது.பஸ் வேகமாக செல்ல கண்ணாயிரம் தன்னை மறந்து படம்பார்த்தபடி விசில் அடித்தார்.திண்டுக்கல் போனவுடன் பிளாக்சில டீ வாங்கிட்டுவந்து நெய் முறுக்கு சாப்பிடணும் என்று மனசில் நினைத்துகொண்டார்.

பஸ்சில் இருந்தவர்கள் எலி மேல ஏறிவந்து கடித்துவிடுமோ என்ற பயத்தில் காலை தூக்கி மேலவைத்தபடி அமர்ந்திருந்தனர். இடையில் எங்கிருந்தோ கீச் கீச் என்று எலி போடும் சத்தம் கேட்க..கண்ணாயிரம் காதை சாய்த்து கேட்டார்.ம்..கத்து…கத்து…திண்டுக்கல்வந்தவுடன் பாரு..விளாசிப்புடுவம் விளாசி..என்று ஆவேசமாக சொன்னார்.அப்போது ஏதோ ஒரு பொருள் தன்மீது பொத்தென்று விழுந்ததைபார்த்த கண்ணாயிரம்…ஏங்க..லைட்டை போடுங்க…லைட்டை போடுங்க என்று கத்த…ஏங்க..என்னங்க..லைட்டை அணைங்கன்னு நீங்கதான் சொன்னிய இப்போ..லைட்டை போடுங்கன்னு சொல்லுறிய…என்னங்க..என்று உதவி டிரைவர் அதட்டினார்.கண்ணாயிரம் கோபத்தில்யோவ்..என்னமோ..என் தலையிலே விழுந்துச்சுய்யா..லைட்டை போடுய்யா என்று சொல்ல உதவி டிரைவர் லைட்டை போட…கண்ணாயிரம் தலையில் எலி ஓடுவதைபார்த்தவர்கள்..கண்ணாயிரம் தலலயில்எலி என்று சிரிக்க…கண்ணாயிரம்..குடையை எடுத்து..எலியை அடிக்க முயல..அது அவருக்கு டேக்கா கொடுத்துவிட்டு கண்ணாயிரத்தை லேசா கன்னத்தில் பிராண்டிவிட்டு கீழே இறங்கி ஓடியது..அப்பாட தலைக்குவந்தது கன்னத்தோட போச்சு என்றபடி பெரு மூச்சுவிட்டார்.என்னா வில்லத்தனம்..காலை கடிக்ககூடாதுன்னு காலை தூக்கி மேலவச்சிருந்தேன்…இது என்னடான்னா..கம்பிவழியா மேல ஏறி தலையில்விழுந்து ஓடுது..நல்லவேளை குடையிருந்ததாலே…தப்பிச்சேன் என்று பெருமைபட்டுக்கொண்டார்.இனிலைட்டை அணைக்கவேண்டாம்…எலிதொல்லை தாங்கமுடியல..ஒரு எலி அங்கும் இங்கும் ஓடுது..மற்ற எலிகள் எங்கே பதுங்கி இருக்குன்னு தெரியல…என்று சொல்ல..தூக்கம் கலைந்த பூங்கொடி..என்னங்க..லைட்டை போட்டுவச்சிருக்கீங்க…தூக்கம் கெடுதுல்லா…லைட்டை அணைக்க சொல்லுங்க என்று கத்த கண்ணாயிரம் பதில் சொல்லமுடியாமல் திணறினார்.
கண்ணாயிரம் மெல்ல..பூங்கொடி…ஒரு எலி இங்கேதான் சுத்துது…என் தலையிலே விழுந்துஓடிச்சு..இன்னாபாரு..என் கன்னத்திலேவேற பிராண்டிட்டுஓடிட்டு..வலிக்குது என்று சொல்ல..பூங்கொடி…ஆ…என்று பற்களை கடித்தார்.பயில்வானை பார்த்து திண்டுக்கல் எப்போவரும் என்று கேட்க…அவர்..இன்னும் பத்து நிமிடத்திலேவந்திடும்…பஸ் வேகமாக போவுதுல்லா என்று சமாதானப்படுத்தினார்.பூங்கொடியும் எரிச்சலுடன் கண்ணாயிரத்தை பார்க்க..கண்ணாயிரம் மெல்ல திரும்பிக்கொண்டார்.படம் கலகலப்பு காட்சியுடன்ஓடிக்கொண்டிருந்தது. சிலர் மட்டும் அந்த காட்சிகளை ரசித்தபடி இருக்க…சிறிது நேரத்தில் பஸ் திண்டுக்கல்வந்து சேர்ந்தது.
பஸ்நிலையம் அருகே பஸ்நின்றது.அனைவரையும் பார்த்து..எல்லோரும் இறங்கி டீசாப்பிட்டுவிட்டுவாங்க…நான் இந்த பஸ்சுக்குள் ஓடின எலிகளை விரட்டிட்டுவர்ரேன் என்றபடி கையில் ஓருகம்பை எடுத்தார்.
எல்லோரும் பஸ்சைவிட்டு கீழே இறங்க…கண்ணாயிரம் டீவாங்க..ஒரு பிளாஸ்குடன் பூங்கொடியுடன் இறங்கினார். பூங்கொடி..நீ பஸ்பக்கத்திலே நில்லு…நான் பிளாஸ்கிலே டீவாங்கிட்டுவர்ரேன் என்றபடி கிளம்பினார். டீக்கடைக்கு சென்றவர் பிளாஸ்கை நல்லா கழுவிட்டு மூணு டீ போடுங்க…ஏலக்கா டீ போடுவீங்களா…என்று கேட்க..டீக்கடைக்காரர்..ஆ..ஜோரா போடுவோம் என்க…நல்லா ஸ்டிராங்கா ஏலக்காய் டீ போடுங்க என்று சொன்னார்.
சூடாக..ஏலக்கா டீ தயாரனதும் பிளாஸ்கில்வாங்கிக்கொண்டு நடந்தார்.வழியில்…பூட்டு…திண்டுக்கல் பூட்டு என்று ஒருவர் கூவி கூவிவிற்றுக்கொண்டிருந்தார்.
கண்ணாயிரம் எட்டிப்பார்த்தார்.கூட்டம் அதிகமாக இருந்தது. பூட்டுக்கு சிறந்தது திண்டுக்கல்…வாங்குகய்யா..வாங்குங்க என்றவரிடம் எனக்கு ஒரு பூட்டு என்று கண்ணாயிரம் கேட்டுவாங்கினார். அதை எப்படி பூட்டவேண்டும் எப்படி திறக்கவேண்டும் என்று பூட்டுவிற்றவரிடம் கேட்டுவிட்டு பைசா கொடுத்தார்.
பூட்டையும் சாவியையும் பைக்குள் போட்டுக்கொண்டு நடந்தவர்..வழியில் விற்பனைக்குவைத்திருந்த வண்ண வண்ணகுடைகளை பார்த்து ரசித்தவர் ஏற்கனவே இருக்கிற குடை கம்பி உடைஞ்சுபோச்சு…இனி அதை விரிக்கமுடியாது…பூங்கொடிக்கு தெரியாம மறைச்சுவச்சிருக்கோம்…இரண்டு குடை வாங்கிட்டுபோவோம்..ஒண்ணு பூங்கொடிக்கு மற்றோன்று நமக்கு என்று கணக்கு போட்டார்.தனக்கு சிவப்பு குடையும் பூங்கொடிக்கு பச்சை குடையும் வாங்கினார்.
பட்டன் குடை நன்றாகவிரிகிறதா…கம்பி பலமாக இருக்கிறதா என்று செக்பண்ணியவர் பணத்தை கொடுத்துவிட்டு இரண்டு குடைகளையும்வாங்கிக்கொண்டு வீர நடைநடந்துவந்தார்.
பஸ்சுக்கு வெளியே நின்ற பூங்கொடியிடம் பிளாஸ்கை கொடுத்தார். இரண்டு குடைகள் இருப்பதைபார்த்த பூங்கொடி..ஏங்க..நம்மக்கிட்டத்தான் குடை இருக்கே..மறுபடி ஏன் குடைவாங்கினீங்க என்று அதட்ட குற்றாலத்திலே சாரல்மழை பெய்யுமாம்…அதான்..குடை வாங்கினேன்..ஆளுக்கு ஓண்ணு வேணூமில்லையா என்று கண்ணாயிரம் சொல்ல..பூங்கொடியே…ஏங்க..அப்பம் ஒரு குடைவாங்கியிருகாகலாமுல்லா…ஏற்கனவேதான் ஒரு குடை இருக்குல்லா..என்று சொல்ல கண்ணாயிரமோ…விலை கம்மின்னான் அதான் இரண்டாவாங்கிட்டேன்..ஏற்கனவே இருக்கிறது பழைய குடைதானே..என்று சமாளித்தார்.
என்ன பழசா..இன்னும் நாலு வருஷத்துக்கு தாங்கும் தெரியுமா என்று பூங்கொடி சத்தமிட..கண்ணாயிரம் அமைதி அமைதி என்று வாயை பொத்தினார்.

அப்போது பஸ்சுக்குள்..பயில்வான்..எலிகளுடன் சிலம்பம் ஆடிக்கொண்டிருந்தார்.உ…ஆ..ஊ..ஆ..என்று சத்தம் எதிரொலிக்க. கம்பால் டமார்..டமார் என்று அடிக்க…காச்மூச்சு என்று கத்தியபடி எலிகள் பஸ்வாசல்வழியாக..நாலுகால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடியது. அப்பாட..எத்தனை எலி..பாண்டிச்சேரியிலிருந்தே வந்திருக்குமோ…திண்டுக்கல்லிலே விட்டா..திருப்பிவந்திடுமா…என்று சந்தேகத்துடன் கேட்டார்.ம்..எலி எலின்னுக்கிட்டு இருக்காதீங்க..பஸ்சிலே ஏறுவோம்..மணப்பாறை முறுக்கை சாப்பிட்டுவிட்டு டீ குடிக்கணும் என்று கண்ணாயிரத்தை பூங்கொடி அவசரப்படுத்தினார். கண்ணாயிரமும் ஆமா…ஆமா..எல்லோரும் பஸ்சிலே ஏறுங்க…என்றபடி பஸ்சில் ஏறினார்.
அங்கே எலிகளுடன் போராடிய பயில்வான் எலிகள் பிராண்டியதால்..முகத்தில் ரத்தம் கசிய நின்று கொண்டிருந்தார்.என்னப்பா…சுற்றுலாபஸ்சுன்னா அப்படியே எடுத்திட்டுவந்திடுறதா…கொஞ்சம் கழுவி கிழுவி..எலிகளையெல்லாம் விரட்டிட்டுவரப்படாதா…என்று பஸ் டிரைவரிடம் பயில்வான் கடிந்து கொண்டார்.
அதற்கு அவர் திடீரென்று சொன்னதால்…ஒண்ணும் செய்யமுடியல..இவ்வளவு எலி இருக்குமுன்னு நினைக்கல என்றார்.
பஸ்சில் ஒவ்வொருவராக..ஏறியதும் பயில்வான்..எல்லோரும் வந்துவிட்டார்களா என்று பார்த்தார்.கண்ணாயிரம் மெல்ல மெல்ல…தன் இருக்கையை அடைந்தார்.அவரை அடுத்துவந்த பூங்கொடி..பிளாஸ்கைவைத்துவிட்டு…ஏங்க..கீழே இருக்கிற பையை எடுங்க..அதிலேதான் நெய்முறுக்கு இருக்கு என்க..கண்ணாயிரம் மெல்ல குனிந்து இருக்கைக்கு கீழே இருந்தபையை எடுத்து பூங்கொடியிடம் கொடுத்தார்.அவர் ஆவலுடன் பையை திறந்து நெய்முறுக்கு பாக்கெட்டை பார்த்தவருக்கு அதிர்ச்சி..
ஒருபாக்கெட்கிழிந்து…அதிலிருந்த முறுக்குகள்பாதியை காணவில்லை.ஓரிரு முறுக்குகள் உடைந்து சிதறிக்கிடந்தன.அதைபார்த்த..பூங்கொடி கோபத்துடன் …ஏன் முறுக்கை எடுத்தீங்க…நான் தூங்கினபிறகு…பாதி முறுக்கை தின்னுப்புட்டியளா..மீதி முறுக்கை கருமி கருமி வேற வச்சிருக்கிய…ஆ..என்று ஆவேசமாக கத்த…கண்ணாயிரம் நானில்ல…நானில்ல…என்று பதில் சொல்ல..பூங்கொடி நம்பாமல்..நீங்க..திங்கலன்னா..யாரு தின்னுருப்பா என்று கேட்க…கண்ணாயிரம் தெரியலையே என்று விழி பதுங்க..அங்கேவந்த பயில்வான் என்ன பிரச்சினை என்று கேட்டார். கண்ணாயிரம்..முறுக்கு காணம போன தை சொல்ல..பயில்வான் சிரித்தபடி…வேறு யாரு..எலியார்தான். நான் விரட்டும்போதுஇந்த பைக்குள்ளிருந்து மூணு எலிகள் முறுக்குடன் துள்ளிக்குதித்து வெளியே ஓடிச்சி…அதை வாசலுக்குவிரட்டுமுன்னே பெரும்பாடு ஆயிற்று..அந்த முறுக்கை சாப்பிடாதீங்க எ ன்றபடி இருக்கையில் அமர்ந்தார்.
பஸ் மதுரையை நோக்கி புறப்பட்டது.கண்ணாயிரமும் பூங்கொடியும் முறுக்கு பாக்கெட்டை பார்த்து என்னசெய்யலாம் என்றபடி ஒருவரையொருவர் பார்த்தனர்.(தொடரும்)
-வே.தபசுகுமார், புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.