July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 5,076 பேருக்கு கொரோனா

1 min read

5,076 new corona cases in India

11.9.2022
இந்தியாவில் ஒரு நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,076 ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் பல்வேறு அலைகளாக பரவி 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக 10 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி வருகிறது.
இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

நாட்டில் இன்று காலைவரை கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,076 ஆக பதிவாகி உள்ளது என தெரிவித்து உள்ளது. இது கடந்த சனிக்கிழமை 5,554 ஆக இருந்தது. இதனால், சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது, தொற்று எண்ணிக்கை சரிவடைந்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 19 ஆயிரத்து 264 ஆக உள்ளது. இது இன்று 4 கோடியே 39 லட்சத்து 13 ஆயிரத்து 294 ஆக இருந்தது. இது 98.71 சதவீதம் ஆகும். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 945 ஆக குறைந்து உள்ளது. இது 48,850 ஆக இருந்தது.

11 பேர் சாவு

நாட்டில் ஒரே நாளில் 11 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளனர். இதனால், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 150 ஆக உயர்ந்து உள்ளது. இது 1.19 சதவீதம் ஆகும்.
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 17 லட்சத்து 81 ஆயிரத்து 723 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதனால், செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 214 கோடியே 95 லட்சத்து 36 ஆயிரத்து 744 ஆகவுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.