July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் உள்வாங்கியது

1 min read

The sea receded for the 2nd day at Kanyakumari

12.9.2022
கன்னியாகுமரியில் இரண்டாவது நாளாக கடல் 50 அடி தூரத்துக்கு உள்வாங்கியது.

கடல் உள்வாங்கியது

பவுர்ணமி முடிந்த நிலையில் இன்றுகாலை2-வதுநாளாக கன்னியாகுமரியில் கடல் திடீரென என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள்கடலில் இறங்கி கால்நனைக்க அச்சப்பட்டனர். ஆனால் எந்தவித அச்சமுமின்றி மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர். கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்வானதன் காரணமாக கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்குபடகுபோக்குவரத்து இன்று காலை 8 மணிக்குதொடங்கப்படவில்லை. இதனால் விவேகானந்தர்மண்டபத்தை படகில் சென்று பார்வையிடவந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். காலை 10மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 10மணிக்கு பிறகு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.


அதே சமயம் திருவள்ளுவர் சிலைக்குரசாயனகலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்கு வரத்து நடைபெறவில்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.