June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4,369 பேராக குறைந்தது

1 min read

Daily corona cases in India reduced to 4,369

13/9/2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4,369 பேராக குறைந்தது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பான 5 ஆயிரத்து 221-ஐ விட குறைவாகும்.
இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 949 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 39 லட்சத்து 30 ஆயிரத்து 417 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 347 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

20பேர் சாவு

கொரோனா தாக்குதலுக்கு இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 185 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 215 கோடியே 47 லட்சத்து 80 ஆயிரத்து 693 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.