May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

கோகினூர் வைரம் பூரி ஜெகன்நாதருக்கு சொந்தமானதா?

1 min read

Is Koginur Vairam Puri owned by Jagannath?

13.9.20222
இந்தியாவிற்கு சொந்தமான கோஹினூர் வைரம், பிரிட்டன் படையெடுப்பின் போது அந்நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அது பூரி ஜெகன்நாதருக்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடப்படுகிறது.

கோஹினூர் வைரம்

மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரித்த அந்த வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெகன்னாத் சேனா என்ற அமைப்பு, கோகினூர் வைரம் பூரி ஜெகநாதர் ஆலயத்திற்கு சொந்தமானது என்று தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங், ஆப்கானிஸ்தானை சேர்ந்த நாதிர் ஷாவை போரில் தோற்கடித்தார் என்றும், இந்த வெற்றியின் நினைவாக பூரி ஜெகநாதருக்கு கோகினூர் வைரத்தை நன்கொடையாக அவர் அளித்தார் என்று ஜெகன்னாத் சேனா அமைப்பாளர் பிரியதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த வைரம் உடனடியாக ஒப்படைக்கப்படவில்லை, ரஞ்சித்சிங் மறைவுக்கு பின்னர் ஆங்கிலேயர்கள் கோகினூர் வைரத்தை அவரது மகன் துலீப்சிங்கிடம் இருந்து பறித்துச் சென்றனர் என்றும் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பிரிட்டன் ராணிக்கு கடிதம் அனுப்பிய பிறகு, அக்டோபர் 19, 2016 அன்று பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து தமக்கு ஒரு தகவல் வந்ததாக பட்நாயக் கூறியுள்ளார். இந்நிலையில் கோகினூர் வைரத்தை மீண்டும் இந்தியா கொண்டு வருவதற்கான செயல் முறையை எளிதாக்கும் நடவடிக்கையில் தலையிடுமாறு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முக்கு, பட்நாயக் மனு அனுப்பியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.