July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

ராகுல்காந்தியின் பாதயாத்திரைக்காக ரூ.2 ஆயிரம் நன்கொடை கேட்டு காய்கறி கடைகாரர் மீது தாக்குதல்

1 min read

Attack on vegetable shopkeeper asking for Rs 2000 donation for Rahul Gandhi’s padayatra

16.9.2022
ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்திற்கு ரூ.2 ஆயிரம் நன்கொடையாக கேட்டு காய்கறி கடை உரிமையாளரை தாக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் நீக்கம் செய்யப்பட்டனர்.

ராகுலின் யாத்ரா

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள ‘பாரத் ஜோடோ யாத்திரை’ தமிழகத்தில் தொடங்கி இப்போது கேரளா வழியாக பயணிக்கிறது. 12 மாநிலங்களை உள்ளடக்கிய கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான 3,500 கிமீ நடைபயணம் 150 நாட்களில் நிறைவடையும்.
இந்த பாதயாத்திரை நேற்று ஒருநாள் நடைபயணம் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் ‘பாரத் ஜோடோ யாத்திரையை’ எட்டாவது நாளாக இன்று கேரள மாநிலம் கொல்லத்தில் மீண்டும் தொடங்கினார்.

தாக்குதல்

இந்த நிலையில் கேரளாவின் கொல்லத்தில் காய்கறி கடை உரிமையாளரை மிரட்டி அவரது கடையை சில காங்கிரஸ் கட்சியினர் அடித்து நொறுக்கிய வீடியோ வைரலாகி உள்ளது. வீடியோவில், கடை உரிமையாளர் எஸ் பவாஸ், “பாரத் ஜோடோ யாத்திரக்கு நிதி வசூல் என்ற பெயரில், என்னையும், எனது தொழிலாளர்களையும் சிலர் தாக்கினர், அவர்கள் ரூ. 2,000 கேட்டார்கள், ஆனால் என்னால் ரூ. 500 கொடுக்க முடியும் என கூறினேன். இதனால் அவர்கள் காய்கறிகளை வீசி எறிந்தனர். எனது கடை மற்றும் எனது வாடிக்கையாளர்களை அடித்து நொறுக்கினர். காங்கிரஸ் தொண்டர்கள் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினர் மற்றும் கடையில் இருந்த தொழிலாளர்களைத் தாக்கினர்.
தனது கடையை சேதப்படுத்திய ஐந்து பேரில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் எச் அனீஷ் கானும் அடங்குவார் என்று பவாஸ் கூறினார்.

இடைநீக்கம்

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று கட்சித் நிர்வாகிகளை உடனடியாக இடைநீக்கம் செய்து கேரள காங்கிரஸ் தலைவர் கே சுதாகரன் அறிவிப்பு வெளியிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.