June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

சோனியா காந்தியுடன் சசிதரூர் திடீர் சந்திப்பு

1 min read

Sasi Tharoor’s surprise meeting with Sonia Gandh

19.9.2022
காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பாக சோனியா காந்தியுடன் சசிதரூர் திடீரென சந்தித்தார்.

காங்.தலைவர்

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். இதனிடையே, காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 24 முதல் 30-ம் தேதி வரை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.
தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

ராகுல்காந்தி

இதனிடையே, தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் யார்? என்பதில் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிற காங்கிர மூத்த தலைவர்களும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஜி23 என்று அழைக்கப்படும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள சசி தரூர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்திப்பு

இந்நிலையில், சசிதரூர் இன்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்தார். டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் அவரை சசிதரூர் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கட்சி விவகாரம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசிதரூர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்த சம்பவம் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *