எய்ம்ஸ் பணி 95 சதவீதம் முடிந்ததாக கூறிய நட்டாவை கேலி செய்யும் எம்.பி.க்கள்
1 min read
MPs mock Natta who said AIIMS work is 95 per cent complete
23.9.2022
எய்ம்ஸ் பணி 95 சதவீதம் முடிந்ததாக நட்டா கூறினார். “ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை.! எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடி விட்டார்கள் “என எம்.பிக்கள் பா.ஜனதாவை கேலி செய்து உள்ளனர்.
எய்ம்ஸ்
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பா,ஜனதா தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளது.எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் நூறிலிருந்து, இருநூற்று ஐம்பதாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து தமிழக பா,ஜனதாவின் டு விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ” மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளன.எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் நூறிலிருந்து, இருநூற்று ஐம்பதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதை பிரதமர் திறந்து வைப்பார்” என்று கூறப்பட்டிருந்தது.