May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

திருப்பதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

1 min read

The Tirupati Brahmotsava ceremony started with flag hoisting

27.9.2022
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு விமர்சையாக புரட்டாசி மாத பிரமோற்ச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருப்பதி பிரம்மோற்சவிழா

திருப்பதி திருமலை, கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா வாகன சேவை நான்கு மாட வீதிகளில் நடத்தவில்லை. கோவில் உள்ளேயே பக்தர்களுக்கு அனுமதியின்றி வாகன சேவை நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி 4 மாடவீதிகளில் வாகன சேவை நடக்கிறது. முதல் நாளான இன்று மாலை 5.45 மணியில் இருந்து மாலை 6.15 மணிவரை மீன லக்னத்தில் பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் பெரிய சேஷ வாகனத்தில் பூதேவி, ஸ்ரீதேவி சமேதராய் ஏழுமலையான் மாட வீதிகளில் உலா வருகிறார். பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் மற்றும் கோவில் வெளிப்புறங்களில் பல்வேறு வண்ண மலர்கள், அரியவகையான பழ வகைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் திருமலை முழுவதும் மின்னொளியில் ஜொலிக்கிறது. இன்று முதல் 9 நாட்களுக்கு கோவில் மாட வீதியில் சுவாமி பல்வேறு வாகனங்களில் காலை, மாலை வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.