May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

ஐயான் சூறாவளி தாக்குதலுக்கு 27 பேர் பலி

1 min read

27 killed in Cyclone Ian attack

1.9.2022
ஐயான் சூறாவளியால் 27 பேர் உயிரிழந்த நிலையில், இது அமெரிக்காவுக்கே ஏற்பட்ட நெருக்கடி என ஜனாதிபதி பைடன் குறிப்பிட்டு உள்ளார்.

சூறாவளி புயல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா என்ற கடற்கரை பகுதியருகே ஐயான் சூறாவளி புயல் கடந்த புதன்கிழமை மதியம் கரையை கடந்தது. இதனால், மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது.
சூறாவளி கரையை கடந்தபோது 4-ம் பிரிவில் அதிக ஆபத்து நிறைந்த சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டு இருந்தது. அடுத்த நாள் (வியாழ கிழமை) அதிகாலை 2 மணி நிலவரப்படி இந்த சூறாவளி வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்றது. அப்போது அதன் வேகம் மணிக்கு 75 மைல்களாக குறைந்து 1-ம் பிரிவில் வகைப்படுத்தப்பட்டது. ஆர்லேண்டோ மற்றும் கேப் கேனவரெல் பகுதிக்கு இடையே சூறாவளி மையம் கொண்டது.
அன்று காலை மத்திய புளோரிடாவையும் பின்னர் மேற்கு அட்லாண்டிக் பகுதியையும் புயல் கடந்து செல்லும் என தேசிய சூறாவளி மையம் தெரிவித்தது. இதனால், ஆரஞ்சு, பிரேவார்டு, செமினோல் மற்றும் வொலூசியா பகுதிகளில் வெள்ள எச்சரிக்கையும் விடப்பட்டது. Also Read – “ரஷியா தற்போதைக்கு அணு ஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்பில்லை” – அமெரிக்கா கருத்து போர்ட் மையர்ஸ் பகுதியில் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சில கார்கள் நீரில் மூழ்கி காணப்பட்டன. சில இடங்களில் மரங்கள் பலத்த காற்றில் பெயர்ந்து விழுந்தன. 25 லட்சம் பேர் கடலோர புளோரிடா பகுதியில் இருந்து பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்பட்டனர். பலர் நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கட்டாயப்படுத்தியும் பலரை அழைத்து செல்ல வேண்டி இருந்தது. அமெரிக்காவில் சமீபத்திய ஆண்டுகளில் மிக கடுமையாக தாக்கிய தீவிர சூறாவளியாக ஐயான் காணப்படுகிறது. எனினும் இரவுக்கு பின்னர், அதன் வேகம் குறைந்து காணப்பட்டது. இந்த ஐயான் சூறாவளியானது, கியூபாவையும் தாக்கியது. இதில், அந்நாட்டில் பலத்த காற்று வீசியது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

1.1 கோடி பேர்

இதனால், 1.1 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். தீவின் மேற்கு பகுதியிலும் பாதிப்பு ஏற்படுத்தியது. கியூபாவின் பினார் டெல் ரியோ மேற்கு மாகாணத்தில் புயலுக்கு 2 பேர் உயிரிழந்தனர். இதன்பின்பு மின் வினியோகம் சீர் செய்யப்பட்டது. கியூபாவில் அகதிகளை ஏற்றி சென்ற படகு ஒன்று கடந்த புதன்கிழமை புயலில் சிக்கியதில் 23 பேரை காணவில்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.