May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலு; பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி

1 min read

Navratri Kolu at Governor’s House; Public is allowed to visit

1.10.2022
‘நவராத்திரி கொலு’, பிரபலங்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சென்னை,

கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருபபதாவது;-
சென்னை கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் கவர்னரின் மனைவி லட்சுமி ரவி ஆகியோரால் கடந்த 26-ந் தேதி அன்று திறந்து வைக்கப்பட்ட ‘நவராத்திரி கொலு’, பிரபலங்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, கவர்னர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள ‘நவராத்திரி கொலு’, தற்போது 5-ந் தேதி வரை நாள்தோறும் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் உட்பட பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர், பாலினம், முகவரி, தொடர்பு எண், அடையாளச்சான்று மற்றும் பார்வையிடும் நாள் ஆகியவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி, அதனை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்முறையாக, தற்போது கவர்னர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு’ ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்கள் முதலில் பார்வையிடலாம்’ என்ற முன்னுரிமையின் அடிப்படையில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 80 நபர்கள் வரை பார்வையிடலாம்.

அடையாள சான்று

பார்வையிடும் நேரம் 4 கட்டங்களாக ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு கட்டத்திற்கு 20 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் மின்னஞ்சல் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், தங்களுக்கான ஒதுக்கீட்டு நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக, பார்வையாளர்கள் மின்னஞ்சலில் வழங்கிய அசல் அடையாளச் சான்றுடன் ஆளுநர் மாளிகையின் 2-வது நுழைவுவாயிலுக்கு வர வேண்டும். இந்தியக் குடிமக்கள் புகைப்படத்துடன் கூடிய செல்லத்தக்க அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். வெளிநாட்டினர் அவர்களின் அடையாளத்திற்காக நுழைவாயிலில் பாஸ்வேர்டை காண்பிக்க வேண்டும். இந்த அடையாளச்சான்று மின்னஞ்சலில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட சான்றாக இருக்கவேண்டும். பார்வையாளர்கள் தனியாக அல்லது அதிகளவு 5 பேர் கொண்ட குழுவாக வரலாம். வளாகத்திற்குள் அலைபேசி மற்றும் புகைப்படக்கருவிகள் அனுமதிக்கப்பட மாட்டாது.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.