May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

ராகுல்காந்திக்கு போட்டியாக பீகார் மாநிலத்தில் பிரசாந்த் கிஷோர் பாதயாத்திரை

1 min read

Prashant Kishore Padayatra in Bihar to compete with Rahul Gandhi

2/10/2022

பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பீகார் மக்களை சந்தித்து அவர்களின் எண்ணங்களை கேட்டறியும் நோக்கில், மாநிலம் முழுவதும் பாத யாத்திரையை தொடங்கியுள்ளார்.

பிரசாந்த் கிஷோர்

பாட்னா, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். இவர், தேர்தலில் பல்வேறு கட்சிகளுக்கு பிரசார வியூகங்களை அமைத்துகொடுத்து தேர்தலில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். குறிப்பாக, 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி, 2021 மேற்குவங்காள தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் முக்கிய பங்காற்றியுள்ளது. இதனிடையே, பீகார் முதல்-மந்திரி நித்திஷ் குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த பிரசாந்த் கிஷோர் பின்னர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து, அவர் தேர்தல் வியூக நிபுணராக தொடர்ந்து செயல்பட்டு வந்த கிஷோர் பின்னர் தேர்தல் வியூக நிபுணர் வேலையை விட்டுவிட்டு மக்களை சந்திக்க உள்ளதாக கூறி வந்தார்.
இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் பிரபல தேர்தல் பிரசாந்த் கிஷோர், பீகார் மக்களை சந்தித்து அவர்களின் எண்ணங்களை கேட்டறியும் நோக்கில், மாநிலம் முழுவதும் பாத யாத்திரையை நேற்று தொடங்கியுள்ளார். மகாத்மா காந்தி பிறந்தநாளான நேற்று ”ஜன் சூரஜ்” என்ற பெயரில் 3,500 கிமீ பாதயாத்திரை பயணத்தை பீஹார் மாநிலம் மேற்கு சம்ப்ரான் மாவட்டத்தில் உள்ள காந்தி ஆசிரமத்திலிருந்து துவக்கி உள்ளார். 1917ஆம் ஆண்டில் இந்த சம்பாரான் பகுதியில்தான் இந்தியாவில் தனது முதல் சத்தியாகிரக போராட்டத்தை அண்ணல் காந்தி நடத்தினார். இதை கருத்தில் கொண்டு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பிஸ்திஹாவ்ரா காந்தி ஆசிரமத்தில் காந்திக்கு மரியாதை செலுத்தி தனது சத்தியாகிரக பயணத்தை பிரசாந்த் கிஷோர் தொடங்கியுள்ளார். 2024 லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி காங். எம்.பி., ராகுல் பாதயாத்திரையை துவக்கியுள்ள நிலையில் பிரசாந்த் கிஷோர் நேற்று துவங்கிய பாதயாத்திரை அரசியல் முக்கியத்துவத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.