இந்தியாவில் புதிதாக 2,529 பேருக்கு கொரோனா
1 min read
2,529 new cases of corona in India
6.10.2022
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாய் 2,529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 3 ஆயிரம் என்ற அளவுக்குள் இருந்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை 2 ஆயிரத்துக்குள் தொற்று அடங்கியது. புதன்கிழமை இது சற்று அதிகரித்து 2,468 ஆக இருந்தது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்து 500-க்கு மேல் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 529 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,46,04,463 ஆக அதிகரித்துள்ளது.
12 பேர் சாவு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,28,745 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,553 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,40,43,436 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 32,282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 2,18,84,20,182 பேருக்கு (இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 79,366 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய புதன்கிழமை ஒரே நாளில் 1,22,057 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 89.62 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.