June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

சூர்யா சிவாவுக்கு விருது அறிவித்த நித்தியானந்தா

1 min read

Nithyananda announced the award to Surya Shiva

6.10.2022
பாரதீய ஜனதா பிரமுகர் சூர்யா சிவாவுக்கு விருது அறிவித்து நித்தியானந்தா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நித்யானந்தா

பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வருகிறார்.

இந்த நிலையில், பாரதீய ஜனதா ஓபிசி பிரிவின் மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவாவுக்கு விருது வழங்கப்படுவதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார். இந்து மதத்தின் புகழை பரப்பி வருவதால் கைலாசா தர்மரட்சகர் விருது சூர்யா சிவாவுக்கு வழங்கப்படும் என நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து சூர்யா சிவா வீடியோ வெளியிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நித்தியானந்தா சுவாமியிடமிருந்து கைலாசா தர்மரட்சகர் விருதைப் பெற்றதில் ஆசிர்வாதமாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த டுவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *