எல்இடி டிவி வெடித்ததில் வாலிபர் சாவு; 2 பேர் படுகாயம்
1 min read
Teenager dies in LED TV explosion; 2 people were seriously injured
6.10.2022
உத்தரபிரதேச மாநிலத்தில் எல்.இ.டி டிவி வெடித்ததில் வாலிபர் இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
டி.வி. வெடித்தது
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒருவரது வீட்டில் பயங்கர சத்தத்துடன் எல்.இ.டி டிவி திடீரென வெடித்தது. டிவி வெடித்ததில் வீட்டில் இருந்த 17 வயது வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, வீட்டின் உள்ளே இருந்த கான்கிரீட் சேதமடைந்ததாகவும், உயிரிழந்த இளைஞரின் முகம் மற்றும் கழுத்தில் எல்இடி திரையின் சிறிய மற்றும் கூர்மையான துகள்கள் தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர். அண்டை வீட்டார் கூறும்போது, சம்பவம் நிகழ்ந்த வீட்டில் குண்டுவெடிப்பு போன்ற பலத்த சத்தம்கேட்டது. முதலில் சிலிண்டர் வெடித்தது என நினைத்தோம். ஆனால் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தான் டிவி வெடித்துள்ளது தெரியவந்தது என்றும் தெரிவித்தன்ர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.