இந்து சமய அறநிலையத்துறையின் பெயரை மாற்ற திருமாவளவன் கோரிக்கை
1 min read
Thirumavalavan’s request to change the name of Hindu Religious Charities Department
7.10.2022
இந்து சமய அறநிலையத்துறையின் பெயரை மாற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் அது சாத்தியமா என்பதுதான் கேள்விக்குறி.
இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறையை சைவ சமய அறநிலையத்துறை அல்லது வைணவ சமய அறநிலையத்துறை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு ராஜராஜசோழன் இந்து மதம் இல்லை என்றும், அந்த காலக்கட்டத்தில் சைவ மதம், வைணவ மதம் மட்டுமே இருந்ததாகவும் சமூகவலைதளங்களில் விவாதம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையை பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முடியுமா?
திருமாவளவனின் இந்த கோரிக்கை்யை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சைவம் அல்லது வைணவ அறநிலையத்துறை என்று மாற்ற வேண்டுமாம். அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சைவம், வைணவம் மட்டுமின்றி வேலை சில அமைப்பின் கோவில்களும் உள்ளன. எனவே அது எப்படி சாத்தியமாகும். கடவுள் நம்பிக்கை இல்லாத அவர் இதில் ஏன் தலையிட வேண்டும் என்று ஆன்மிகவாதி ஒருவர் கூறினார்.