இந்தியாவில் புதிதாக 1,957 பேருக்கு கொரோனா
1 min read
1,957 new cases of corona in India
11/10/2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மளமளவென குறைந்து வருகிறது. ஒரு நாளில் 1,957 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த திங்கட்கிழமை 2 ஆயிரத்து 424 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இன்று இந்த எண்ணிக்கை ஆயிரத்து 957 ஆக குறைந்தது. இதுவரை மொத்தம் 4 கோடியே 46 லட்சத்து 16 ஆயிரத்து 394 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று தொற்றில் இருந்து 2 ஆயிரத்து 654 பேர் மீண்டனர். இதுவரை 4 கோடியே 40 லட்சத்து 60 ஆயிரத்து 198 பேர் குணமடைந்துள்ளனர்.நாடு முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 28,079 லிருந்து 27,374 ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு மேலும் 8 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 5,28,822 ஆக உயர்ந்துள்ளது.