இந்தியாவில் புதிதாக 1,542 பேருக்கு கொரோனா
1 min read
1,542 new cases of corona in India
18.10.2022
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஒரு நாளில் 1542 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 1,542 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,32,430 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 26,449 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,919 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,77,068 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,913 ஆக உயர்ந்தது.