July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை ஏற்றிருந்தால் ஜெயலலிதாவை காப்பாற்றியிருக்கலாம்

1 min read

Jayalalitha could have been saved if she had followed the American doctor’s advice

18.10.2022
அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை ஏற்றிருந்தால் ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என்று ஆறுமுகச்சாமி ஆணைய அறிக்கை கூறியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை செய்யாமல் இருக்க சசிகாலா செய்த தந்திரம் …! அறிக்கையில் பகீர் தகவல்கள் தினத்தந்தி அக்டோபர் 18, 1:58 pm (Updated: அக்டோபர் 18, 2:01 pm) Text Size அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு இடம்பெற்று உள்ளது சென்னை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.’ அறிக்கையில் சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. அப்போதைய தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் செல்முறைக்களுக்காக பல்வேறு நாட்களில் 21 படிவங்களில் கையொப்பமிடுவது குறித்து அவர் அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை. இது ஒரு முக்கியஸ்தரால செய்யப்பட்ட மாபெரும் குற்றம்.
அப்போதைய முதல்வர் உயிர் தொடர்பானது என்பதால் அதன் விளைவுகளை நிச்சயம் பெறுவார்.எனவே விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை.
அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார்; ஆனால் அது நடக்கவில்லை.

சுமூக உறவு இல்லை

2012ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும்,சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை; ஜெ-வுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு தாமதமின்றி அழைத்து சென்றுள்ளனர். அதன் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன. ஜெயலலிதா இறந்த நால் இறந்த நாரத்தில் முரண்பாடு உள்ளது.
சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள். 2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது. ஜெயலலிதா டிச. 5ம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிச. 4ம் தேதியே இறந்தார் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ, அறுவை சிகிச்சைக்கு வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் ஏன் கடைசி வரை நடக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு வெஜிடேசன், குடல்நோய் அறிகுறி உபாதைகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவ அறிக்கையில் குறிப்பிடவில்லை. சசிகலா – ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம்.
இங்கிலாந்து மருத்துவரின் வாய்வழி கருத்தை ஏற்று, இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என அப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை ஏற்றிருந்தால் முதல்வரின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும்.
மருத்துவமனையின் 10 அறைகள் சசிகலா உறவினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற பொய்யான அறிக்கையை மருத்துவமனை வெளியிட்டு உள்ளது. ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியது என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சுருக்கமாக, தொடக்கத்திலிருந்தே, இதயக் கோளாறு மற்றும் நுரையீரல் பிரச்சினை தொடர்பாக மருத்துவமனையால் வழங்கப்பட்ட சிகிச்சையைப் பற்றி ஆணையத்திற்கு மிகுந்த சந்தேகம் உள்ளது என்பது மிகவும் தெளிவாக உள்ளது.
இஎஸ்சி வழிகாட்டுதல்களின்படி ஒரு நோயாளிக்கு 10 மி.மீ.-க்கு மேல் வெஜிடேசன் இருப்பது கண்டறியப்பட்டால், அது குறிப்பிட்ட காலத்திற்குள் மருந்து மூலம் கரைக்கப்படாவிட்டால் அதற்கு அறுவை சிகிச்சையே மாற்று தீர்வாகும். அத்தகைய நோயாளிக்கு சிகிச்சையளிப்பதில் அறுவை சிகிச்சை நிபுணரே குழுவின் தலைவராக இருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
மேற்படி சாட்சிங்களிலிருந்து, வெஜிடேசன் 14 மி.மீக்கு மேல் உள்ளது என்பது தெளிவாக உள்ளது. மேலும், ஆறு வாரங்களுக்கும் மேலாக மருத்துகள் அளிக்கப்பட்ட போதிலும், அது குணமாகவில்லை என்றும், நுரையீரலில் திரவ சேகரிப்பு அப்படியே இருந்தது என்றும் சில வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். மருத்துவ நெறிமுறைகளின்படி அப்போலோ மருத்துவமனை அறுவை சிகிச்சை செய்து வெஜிடேசனை அகற்றி, நிலையான பெர்ஃபொரேசனை மூடியிருந்தால் அது நன்றாக இருந்திருக்கும். ஆனால் இதை செய்யவில்லை. இதை செய்து இருந்தால் ஜெயலலிதா உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று இந்த ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
561 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையின் இறுதியில் “நோய் நாடி நோய் முதல் நாடி” என்ற திருக்குறளுக்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய தெளிவுரையும், “காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா” என்ற திருக்குறளுக்கு டாக்டர் மு.வரதராசன் எழுதியை தெளிவுரையும் மேற்கோள் காட்டப்பட்டு, அறிக்கையை நிறைவு செய்துள்ளார் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.