June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜெயலலிதா மரணத்தில் குற்றம் செய்தவர்கள் விவரம்- விசாரணை ஆணையம் அறிக்கை

1 min read

Details of Jayalalitha’s death culprits- Commission of Inquiry report

18.10.2022
ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்வதை பற்றி டாக்டர் சுமின் சர்மா விளக்கிய பிறகும் ஆஞ்சியோ செய்யப்படவில்லை. சென்னை
ஜெயலலிதா மரணம்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை அமைக்கப்பட்டது. விசாரணை ஆனையம் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் – ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது.

அறிக்கை

இதையடுத்து 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்தது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கூற்பபட்டு இருப்பதாவது:-

ஆஞ்சியோ

22.9.2016 அன்று இரவு சுயநினைவற்ற நிலையில் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்வதை பற்றி டாக்டர் சுமின் சர்மா விளக்கிய பிறகும் ஆஞ்சியோ செய்யப்படவில்லை.
ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்தச் செல்ல தயார் என கூறியும் அது ஏன் நடக்கவில்லை. போயஸ் கார்டனில் மயங்கி விழுந்து ஜெயலலிதா மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டதற்கு பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டுள்ளன.

இறந்த தேதி

ஜெயலலிதா இறந்த தேதி குறித்து முரண்பட்ட தகவல்கள் உள்ளன. ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள். 2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது. ஜெயலலிதா டிச. 5ம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிச. 4ம் தேதியே இறந்தார் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுவதை தவிற வேறு எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் ஆணையத்தில் முன்வைக்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவக்குழு 5 முறை அப்போலோ வந்திருந்தாலும் ஜெயலலதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை.

விசாரணைக்கு பரிந்துரை

சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
அப்போதைய தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் செல்முறைக்களுக்காக பல்வேறு நாட்களில் 21 படிவங்களில் கையொப்பமிடுவது குறித்து அவர் அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை. இது ஒரு முக்கியஸ்தரால் செய்யப்பட்ட மாபெரும் குற்றம். அப்போதைய முதல்-அமைச்சர் உயிர் தொடர்பானது என்பதால் அதன் விளைவுகளை நிச்சயம் பெறுவார்.எனவே விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *