ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்ததா? ஆஜராக வனத்துறை சம்மன்
1 min read
Leopard found dead in Rabindranath garden? Forest department summons to appear
21.10.2022
தேனி கைலாசப்பட்டியில் சிறுத்தை உயிரிழந்தது தொடர்பாக எம்.பி. ரவீந்திரநாத்திற்கு வனத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.
சிறுத்தை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் கடந்த மாதம் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து சிறுத்தை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். இதில், வனப்பகுதியில் ஆட்டுக்கிடாய் அமைத்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனால் சிறுத்தை உயிரிழந்த நிலத்தின் உரிமையாளர்களை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், ரவீந்திரநாத் எம்.பிக்கு சொந்தமான இடம் இருப்பதால் சிறுத்தை உயிரிழந்த புகார் தொடர்பாக அவருக்கு வனத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளது. அதில், எம்.பி. ரவீந்திரநாத் உட்பட மூன்று நில உரிமையாளர்கள் 2 வாரத்திற்குள் தேனி மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.