கேதார்நாத்கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
1 min read
PM Modi Worship at Kedarnath Temple
21.10.2022
உத்தரகாண்ட் சென்ற பிரதமர் மோடி ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடத்தில் வழிபாடு செய்தார்.
கேதார்நாத்தில் மோடி
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெள்ளத்தில் ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடம் சேதமடைந்தது. பின்னர், மறுசீரமைக்கப்பட்ட நினைவிடத்தை கடந்த ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். தற்போது உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி ரூ. 3 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக பிரதமர் மோடி கேதார்நாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார் . பின்னர், கேதார்நாத் ரோப் கார் திட்டத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார். அதன்பின் பிரதமர் மோடி ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடத்திற்கு சென்றார். அங்கு வழிபாடு நடத்தினார்.
.இதனை அடுத்து மந்தகினி மற்றும் சரஸ்வதி அஸ்தபத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார்.
பத்ரிநாத் கோயிலில் தரிசனம் செய்கிறார். மனாவிலிருந்து கணவாய் வரை, ஜோஷிமத் முதல் மலாரி வரை சுமார் ரூ.1000 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.