June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

பேரக் குழந்தைகளுடன் ரஜினி தீபாவளி கொண்டாடினார்

1 min read

Rajinikanth celebrated Diwali with his grandchildren

24.10.2022
நடிகர் ரஜினிகாந்த் தனது பேரக் குழந்தைகளுடன் ஆனந்தமாக தீபாவளி கொண்டாடினார்.

ரஜினிகாந்த்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர். அதிகாலையே புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோலிவுட் ஸ்டார்களுடன் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பேரக்குழந்தைகளுடன் தீபாவளியை இன்று ஆனந்தமாக கொண்டாடினார்.
தன்னுடைய இரு பிள்ளைகளுக்கும் காலில் மஞ்சள், சந்தனம், குங்குமத்தை ஐஸ்வர்யா இ்ட்டார். அவர்களின் பின்னால் வெள்ளை நிற ஜிப்பா உடையில் ரஜினிகாந்த் நின்றுகொண்டு பேரக்குழந்தைகளை பார்த்துக்கொண்டிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *