தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 49 பேர் கைது
1 min read
49 people arrested for illegal activities in Tenkasi district
25.10.2022
தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 49 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு பணி
தென்காசி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களில் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் எந்த ஒரு அசம்பாவித செயல்களும் நடைபெறாத வண்ணம் பாதுகாக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் மாவட்டம் முழுவதும் 23 மற்றும் 24-ந் தேதிகளில் இரண்டு நாட்களில் 745 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் ஆகிய இரண்டு நாட்களில் பொது இடத்தில் பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்த 11 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த 31 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 358 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புகையிலை பொருட்கள்
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 4,568 ரூபாய் மதிப்பிலான 5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 18,100 ரூபாய் மதிப்பிலான சுமார் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 42 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 37,940 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் 192 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாகனத்தில் வேகமாக மற்றும் அபாயகரமாக வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் போன்ற சாலை விதிகளை மீறிய 953 நபர்கள் மீது சாலை விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாட்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அயராது பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பாராட்டுகளை தெரிவித்தார்.